Connect with us

மீண்டும் கைகோர்த்த ஜி.வி பிரகாஷ் – தனுஷ் காம்போ.. ஓப்பனிங் பாடல் குறித்த கலக்கல் அப்டேட்

Cinema News

மீண்டும் கைகோர்த்த ஜி.வி பிரகாஷ் – தனுஷ் காம்போ.. ஓப்பனிங் பாடல் குறித்த கலக்கல் அப்டேட்

பிரபல இளம் திரைப்படத் இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்கிய வரவிருக்கும் புலனாய்வு திரில்லர் ‘மாறன்’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினே போஸ்ட் புரொடக்‌ஷனில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகின்ற பிப்ரவரி மாதம் ரிலீசாக உள்ளது என கூறப்படுகிறது.இருந்தாலும் ,இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்து காதிக்ருக்கலாம்.தனுஷ் மாறனுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தில் கிருஷ்ணகுமார், மகேந்திரன், ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் என்று சொல்லப்படும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் தனுஷ் பத்திரிக்கையாளர் வேடத்தில் நடிக்கிறார்கள்.

தற்போது படத்தின் முதல் பாடல் குறித்து ட்டுவிட்டரில் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அதில், மாறன் படத்தின் ஓப்பனிங் பாடலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் நடிகர் தனுஷுடன் இணைந்து தெருக்குரல் அறிவு பாடியுள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.எனவே மாறன் படத்தில் மாஸான ஓப்பனிங் பாடல் இடம் பெற்றிருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மாறன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடித்தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

More in Cinema News

To Top