Connect with us

மோசமான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் கெத்து காட்டும் பிரம்மாஸ்திரா திரைப்படம்…

Celebrities

மோசமான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் கெத்து காட்டும் பிரம்மாஸ்திரா திரைப்படம்…

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் பாண் இந்தியா படமாக இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா . இப்படத்தில் அமிதாப் பச்சன், மௌனி ராய், நாகர்ஜுனா ,ஆலியா பட் என இந்தியளவில் பிரபலமான பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

தொடர்ந்து பல தோல்வி படங்களை மட்டுமே சந்தித்து வரும் பாலிவுட் திரையுலகம் பிரம்மாஸ்திரா படத்தின் வெற்றியை மட்டுமே நம்பி இருந்தது. ஆனால், பிரம்மாஸ்திரா பகுதி 1 திரைப்படமும் பாலிவுட் திரையுலகை கைவிட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

மோசமான விமர்சனங்கள்.. ஆனாலும் கோடிக்கணக்கில் வசூலை அள்ளிய பிரம்மாஸ்திரா | Brahmastra Movie First Day Box Office

ஆனால் இதில் ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால் மோசமான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 60 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டியுள்ளது.

இது பிரம்மாஸ்திரா திரைப்படத்திற்கு கிடைத்துள்ள சிறப்பான ஓப்பனிங் என்று கூறப்படுகிறது. ஆனால், கடுமையான விமர்சனங்களால் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் குறையும் என்று கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'Salaar' படத்தின் Trailer வெளியானது!"

More in Celebrities

To Top