Connect with us

ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கிய திரையுலகம்..! கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்..!

Cinema News

ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கிய திரையுலகம்..! கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவசங்கர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு 8 மணியளவில் உயிரிழந்துள்ளதாக அவரது மகன் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் இதுவரை தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் 800-க்கும் அதிகமான படங்களுக்கு நடனம் அமைத்தவர்.

தல அஜித்தின் ‘வரலாறு’ படத்திற்கும் இவர்தான் நடனம் அமைத்தார். மேலும், தனுஷின் ‘திருடா திருடி’ படத்தில் இடம்பிடித்த ‘மன்மதராசா’ பாடலுக்கும் நடனம் அமைத்தவர் இவர் தான் .

சூப்பர் ஹிட் அடித்த ராஜமெளலி – ராம் சரணின் ‘தீரா தீரா தீரா’ பாடலுக்கு நடனம் அமைத்து தேசிய விருதையும் இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையயடுத்து வரலாறு , பரதேசி , அரண்மனை , கஜினிகாந்த் உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்தவர் சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் மக்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்தார்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரது மருத்துவ சிகிச்சைகளுக்கு போதிய பணம் இல்லாததால், அவரது மகன் அஜய் கிருஷ்ணா திரை பிரபலங்கள் உதவுமாறு கோரிக்கை வைத்து இருந்தார்.

நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சைக்கு சோனு சூட் உதவுவதாக உறுதி அளித்து இருந்தார். அதேபோல், நடிகர் தனுஷும் அவரது சிகிச்சைக்கு தொகை ஒன்றினை அளித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது திரை வட்டாரங்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது .

More in Cinema News

To Top