Connect with us

“கஸ்டடி : எ வெங்கட் பிரபு வேட்டை”.. நாக சைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!

Cinema News

“கஸ்டடி : எ வெங்கட் பிரபு வேட்டை”.. நாக சைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவின் தெலுங்கு-தமிழ் இருமொழித் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பைத் தொடங்கியது. என்சி 22 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நாக சைதன்யாவின் பிறந்தநாளான இன்று படத்தின் தலைப்பை அறிவித்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். கஸ்டடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நாக சைதன்யா கொடூரமான அவதாரத்தில் நடித்துள்ளார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பகிர்ந்துள்ள திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ், “நாக சைதன்யா – வெங்கட் பிரபு: NC22 ‘கஸ்டடி’ என்ற தலைப்பில் பர்ஸ்ட் லுக்கை ட்வீட் செய்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நாக சைதன்யா தனது முகத்தில் கடுமையான தோற்றத்துடன் போலீஸ் அவதாரத்தில் காணப்படுகிறார்.

அவர் நேர்மையான மற்றும் வலுவான எண்ணம் கொண்ட ‘எ சிவா’ என்ற பெயருடன் உள்ள நிலையில், அவரை பல போலீசார் சேர்ந்து பிடித்துள்ளது போல் போஸ்டர் உள்ளது. மேலும் கஸ்டடிக்கு ‘வெங்கட் பிரபு வேட்டை’ என்பது டேக்லைனாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்கிறார். மேலும் படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஒன்றாக இசையமைகின்றனர்.

நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி தவிர, இந்த படத்தில் பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் வெண்ணேலா கிஷோர் மற்றும் வெங்கட் பிரபுவின் சகோதரரும் தமிழ் நகைச்சுவை நடிகருமான பிரேம்ஜி அமரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘டிரான்ஸ்போர்ட்டர் 3’, ‘டன்கிர்க்’, ‘இன்செப்ஷன்’ மற்றும் ‘சிட்டி ஹண்டர்’ போன்ற ஹாலிவுட் படங்களில் தனது அற்புதமான பணிக்காக அறியப்பட்ட ஹாலிவுட் ஸ்டண்ட்மேன் யானிக் பென்னின் சண்டைக்காட்சிகள் இந்தப் படத்தில் உள்ளன என்பது கூடுதல் தகவல்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top