தவழும் குழந்தைகளின் ரேஸ் …!வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை வீடியோ …!

0
219

மழலைப் பருவம் எப்பொழுதுமே திரும்பி பார்க்க முடியாத பருவம் என்று சொல்வார்கள்.அதிலும் தவழும் குழந்தைகள் பார்த்தாலே நமது மனசு பரவசமாகிவிடும்.அந்த வகையில் தவழும் குழந்தைகள் கலந்த ரேஸ் தற்பொழுது வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.ரேஸில் கலந்து கொண்ட குழந்தைகள் சிலர் விட்ட இடத்திலேயே ஆட்டம் போட்டு கொண்டிருக்கின்றனர். இந்த ரேஸில் எல்லை கோட்டிற்கு அருகே வந்து பிறகு ஒரு குழந்தை செய்யும் சேட்டை தான் ஹைலைட். இலக்கிற்கு அருகில் வந்த குழந்தை மீண்டும் திரும்ப சென்ற மற்றொரு குழந்தையுடன் விளையாடுகிறது.

Posted by Vijay Raj on Tuesday, December 17, 2019

பெற்றோர்கள் குழந்தையை வரவைக்க நடத்தும் நிகழ்வுகளும் சுவாரஸ்யமாக உள்ளது. இறுதியாக ஒரு குழந்தை யாரும் எதிர்பார்க்காத நிலையில் இலக்கை வந்தடைந்து வெற்றி பெறுகிறது. ரேஸில் வெற்றி பெற்ற குழந்தைக்கு பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டது. இந்த வீடியோ பார்ப்பவர்களின் இதயத்தை கொள்ளையடித்து செல்கின்றது.