Connect with us

“மன்னிக்கவே முடியாத அலட்சியம்.. ரயில் விபத்து குறித்து பிரியா ஆனந்த் விளாசல்!”

Celebrities

“மன்னிக்கவே முடியாத அலட்சியம்.. ரயில் விபத்து குறித்து பிரியா ஆனந்த் விளாசல்!”

கோரமண்டல் ரயில் விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், காலையில் கண் விழித்து டிவி சேனலை ஆன் செய்த அத்தனை பிரபலங்களையும் பொதுமக்களையும் இந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சினிமா பிரபலங்கள் வரிசையாக தங்கள் இரங்கல்களையும் ஆதங்கங்களையும் பதிவிட்டு வரும் நிலையில், லியோ பட நடிகையும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக பலி எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே போகிறது ஒட்டுமொத்த இந்திய மக்களின் இதயங்களையும் சுக்கு நூறாக உடைத்து வருகிறது. 233 ஆக இருந்த பலி எண்ணிக்கை தற்போது 280 ஆக மாறி விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், 900க்கும் மேற்பட்ட மக்கள் காயம் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறுகின்றனர். நடிகர் ஜெய்யின் வாமணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா ஆனந்த் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

பிரசாந்த் உடன் அந்தகன் மற்றும் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்துள்ள பிரியா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ரயில் விபத்து தொடர்பாக ட்வீட் போட்டு விளாசி உள்ளார். கோரமண்டல் ரயில் விபத்தின் கோரக் காட்சிகளை ஷேர் செய்து “Devastating! Unacceptable negligence..” (மனம் உடைந்து போய் விட்டது.. இது ஏற்றுக் கொள்ள முடியாத அலட்சியம்) என பதிவிட்டு தனது கண்டனத்தையும் இரங்கலையும் பதிவிட்டுள்ளார். LEO பட நடிகை பிரியா ஆனந்த் பதிவிட்டுள்ள இந்த கண்டன போஸ்ட்டை பார்த்த அவரது ரசிகர்கள், “Need to take Safety Precautions,,, Irresponsible officer’s,,,,” அதிகாரிகளின் அலட்சியம் தான் இப்படியொரு கோர விபத்து நடந்ததற்கு காரணம் என பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சித்தா - செப்டம்பர் 28, 2023

More in Celebrities

To Top