Connect with us

அப்பாவை காணோம்னு கதறி அழும் கூல் சுரேஷ் …வைரலாகும் வீடியோ

Cinema News

அப்பாவை காணோம்னு கதறி அழும் கூல் சுரேஷ் …வைரலாகும் வீடியோ

சிம்பு நடிப்பில் ‘ வெந்து தணிந்தது காடு’ படம் தயாராக இருப்பது அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை பிடித்துக்கொண்டவர்தான், இப்போது வரை அதை விடவே இல்லை. எங்கு சென்றாலும் ‘ வெந்து தணிந்தது காடு, வணக்கத்தை போடு’ என்று அவர் தொடர்ந்து பேசி வர, போக போக அது சமூக வலைதளங்களில் வைரலாக ஆரம்பித்தது.

அந்த வைரலை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட கூல் சுரேஷ் படங்களின் முதல் காட்சிக்கு சென்று ரிவியூ சொல்ல ஆரம்பித்தார். அவரது ரிவியூவில் எதுவுமில்லை என்றாலும், அவர் பேசும் பாணியும், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏதாவது அவர் செய்வதும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாக ஆரம்பித்தன. அவரது வீடியோக்கள் மில்லியன்களை எட்டஅதுவரை படம் குறித்தான கருத்துகளை மக்களிடம் கேட்டு வந்த யூடியூப் சமுதாயம், கூல் சுரேஷின் ரிவியூக்கு காத்து கிடந்தது.

பின்னர் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கூல் சுரேஷை நேரில் சந்தித்து அவருக்கு ஐபோன் ஒன்றையும் பரிசாக அளித்ததோடு அவரது பிள்ளையின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இந்நிலையில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கூல் சுரேஷ் அதில் தனது தந்தை காலையில் வாக்கிங் சென்றதாகவும் இதுவரை திரும்பவில்லை. தனது தந்தையை காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். தனது தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இவரை எங்கேயும் கண்டால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார் சுரேஷ். இந்த பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top