Connect with us

பயந்துட்டியா குமாரு ?அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி.. அந்தர் பல்டி அடித்த கூல் சுரேஷ்!

Cinema News

பயந்துட்டியா குமாரு ?அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி.. அந்தர் பல்டி அடித்த கூல் சுரேஷ்!

கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்குகளில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்த விருமன் திரைப்படம் வெளியானது. அந்த படத்தை டிஎஸ் தியேட்டரில் பார்த்த கூல் சுரேஷ் அதிதியை பார்த்து சில்லறையை சிதற விட்டேன் என்றும், அதிதி ஷங்கர் தான் என்னுடைய காதலி என்றும் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் காமெடியாக டிரெண்டானது.

அதிதி என் காதலி

அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அதிதி ஷங்கரை தான் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், படங்களில் காதலை சேர்த்து வைப்பது போல என்னுடைய காதலையும் சேர்த்து வைக்க வேண்டும் ஷங்கர் சார் என எழுதிய லவ் லெட்டரையும் மீடியாவுக்கு முன்பாக கூல் சுரேஷ் காட்டியது சர்ச்சையை கிளப்பியது.

லவ் லெட்டர் வேற

மன்னிப்பு மட்டும் கேட்காமல், நடிகை அதிதி ஷங்கர் எனக்கு தங்கச்சி மாதிரி என்று ஒரே போடாக கூல் சுரேஷ் அல்லு நடுங்க பேசியிருப்பது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. விருமன் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்து போய் அப்படி ஓவராக பேசி விட்டேன் என்றும் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.இந்நிலையில், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு கூல் சுரேஷ் பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு என ஒவ்வொரு படத்துக்கும் வந்து உளறிக் கொட்டிக் கொண்டு டிரெண்டாகி வந்த கூல் சுரேஷுக்கு இந்த முறை உண்மையிலேயே அடி பலமோ என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top