Cinema News
குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னர்க்கு பரிசு எவ்வளவு தெரியுமா..?
குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னர் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு சீசன்களில் டைட்டில் வின்னர் வென்ற வனிதா மற்றும் கனி ஆகிய இருவருக்குமே ஐந்து லட்சம் மட்டுமே பரிசுத்தொகை கொடுக்கப்பட்ட நிலையில் இந்த முறை பரிசுத்தொகை இரு மடங்காகி உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த போட்டியாளர்கள் யார் என்பது இதுவரை தகவல் வெளிவரவில்லை என்றும் ஆனாலும் அவர்களுக்கும் பரிசு தொகை கணிசமாக வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
