Connect with us

தளபதியின் ரஞ்சிதமே பாடலுக்கு செம க்யூட்டாக டான்ஸ் ஆடிய குக் வித் கோமாளி நடுவர் தாமு..! வைரல் வீடியோ

Celebrities

தளபதியின் ரஞ்சிதமே பாடலுக்கு செம க்யூட்டாக டான்ஸ் ஆடிய குக் வித் கோமாளி நடுவர் தாமு..! வைரல் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் நான்வது சீசன் இந்த வாரம் துவங்குகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல ஹிட்டான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘குக்கு வித் கோமாளி’.

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை ரசிகர்களால் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது இன்னும் சொல்ல போனால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக மாறிவிட்டது .

கடந்த மூன்று வருடங்களில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒவ்வரு எபிசோடும் செம ஹிட்டு தான் . இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அஸ்வின், பவித்ரா, தர்ஷா, புகழ், ஷிவாங்கி ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் தற்போது திரையுலகில் மிகவும் பிஸியாக உள்ளனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இம்மாதம் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது வழக்கம் போல் இந்த சீசனும் ஹிட்டாக தான் போகிறது.

குக் வித் கோமாளியில் அணைத்து சீசன்களிலும் நடுவராக இருந்தவர் செஃப் தாமு. இவர் உலகளவில் பிரபலமான சமையல் கலை வல்லுநர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவரும் செஃப் வெங்கடேஷ் பட் இருவரும் அடிக்கும் லூடிக்கு தனி வரவேற்பு உள்ளது

இந்நிலையில், செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம க்யூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தளபதியின் வாரிசு படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே பாடலுக்கு செம க்யூட்டாக டான்ஸ் ஆடி உள்ளார் செஃப் தாமு. அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

https://www.instagram.com/reel/CnrJcHNJdZr/?utm_source=ig_web_copy_link

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top