Cinema News
‘குக்கு வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சிக்கு வந்த புதிய சிக்கல்..?ஏமாற்றத்தில் ரசிகர்கள்
சமீப காலமாகவே அனைத்து தொலைக்காட்சியினரும் தற்பொழுது ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதில் நீ,நான் என போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர் .அந்தவகையில் விஜய் டிவியில் ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி கிடைத்த வெற்றி ஈடு எல்லையில்லாதது.இந்த நிகழ்ச்சி இதுவரை தொடர்ந்து 2 சீசன்களை வெற்றிகரமாக முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தமிழ் தொலைக்காட்சித் துறையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அஸ்வின், பவித்ரா, தர்ஷா, புகழ், ஷிவாங்கி ஆகியோர் அதிகம் பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷோ மூலம் அவர்கள் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் தற்போது திரையுலகில் பிஸியாக உள்ளனர்.

இந்த காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது. இரண்டாம் பாகத்தில் சமையல் போட்டியாளர்களாக அஸ்வின் , பவித்ரா, கனி, தீபா, மதுரை முத்து, பாபா பாஸ்கர், தர்ஷா குப்தா, ஷகீலா ஆகியோர் கலந்து கொண்டனர். கோமாளியாக சிவாங்கி, புகழ், சுனிதா, மணிமேகலை, டைகர் தங்கதுரை, சரத், பாலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த சீசனில் கனி வெற்றி பெற்றார்.கடந்த வருடம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வின் ,புகழ் ,ஷிவாங்கி,பாலா ,பவித்ரா ,தர்ஷா இவர்களின் படம் இந்த வருடம் ரிலீசாகிறது என்றால்,அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

இதற்கிடையில், Cooku வித் கோமாளியின் மூன்றாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. வரவிருக்கும் சீசனின் ப்ரோமோவில் சிவாங்கி, மணிமேகலை, சுனிதா மற்றும் பாலா ஆகியோர் கோமாளிகளாக இடம்பெற்றுள்ளனர். மேலும், முதல் இரண்டு சீசன்களில் நடுவர்களாக இருந்த தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் புதிய சீசனிலும் திரும்பி வருகிறார்கள்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் மூன்றாம் சீசனின் ஷூட்டிங் தொடங்கியது. இதற்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன் இந்த நிகழ்ச்சிக்கான முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆனால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்குவதில் தற்போது பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பை நடத்த முடியாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் இதன் ஒளிபரப்பு தேதியை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
