சிம்புவின் மாநாடு படத்தில் மற்றொரு குக் வித் கோமாளி பிரபலங்களா..?வைரலாகும் போட்டோ

0
27

சுரேஷ் காமாச்சி தயாரிக்கும் அரசியல் பொழுதுபோக்கு திரைப்படமான மாநாடு படத்துக்காக நடிகர் சிம்பு முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை, இந்த படம் அதன் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

இவிபி ஃபிலிம் சிட்டியில் சிறப்பு செட்களில் படம் வேகமாக படமாக்கப்படுவதால், இப்போது ஒரு பிரபலமான தொலைக்காட்சி நட்சத்திரம் மாநாடு படத்தில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இது வேறு யாருமல்ல, குக் வித் கோமாளி புகழ் மாநாடு படத்தில் நடிகர் சிம்புவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த வைரல் போட்டோ வெளியானது.

இதற்கிடையில், குக் வித் கோமாளி சீசன் 2 இன் கிராண்ட் ஃபைனலில் எஸ்.டி.ஆர் பங்கேற்றுள்ள எபிசோட் நாளை ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி புகழை அடுத்து சரத் மற்றும் தீனா ஆகியோர்கள் இருக்கும் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.இவர்களும் இந்த படத்தில் நடித்துள்ளார்களா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.