Connect with us

எக்ஸ்டரா காதல் சுந்தர் C இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் படத்தின் ட்ரைலர் – இதோ

Cinema News

எக்ஸ்டரா காதல் சுந்தர் C இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் படத்தின் ட்ரைலர் – இதோ

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் சுந்தர் சி.சூப்பர் ஸ்டார் ரஜினி,மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர் இவர்.முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் இவர்.தொடர்ந்து பல நல்ல படங்களை இயக்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் சுந்தர் சி.இன்று வரை நாம் ரசித்து பார்க்கும் 90.களில் வெளியாகிய படங்களில் பாதி இவர் இயக்கியவைதான்.உதாரணமாக சொல்லப்போனால் அருணாச்சலம்,உள்ளதை அள்ளிதா,அன்பே சிவம்,வின்னர் போன்ற வெற்றி படங்கள் இவருடையது தான்.

இந்த நிலையில் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த ஆண்டு ‘அரண்மனை 3’ படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். குஷ்புவின் ‘அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ மற்றும் ‘பென்ஸ் மீடியா நிறுவனங்கள்’ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலரில் படம் முழுக்க காதலை அள்ளித்தெளித்துள்ளார் சுந்தர் சி.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .இப்படம் அக்டொபர் 7 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Parking படத்தின் Twitter விமர்சனம்…படம் வரும் முன்னே படத்தின் Result…இந்த வருடத்தின் பெரிய ஹிட்டா இருக்குமோ!

More in Cinema News

To Top