Connect with us

முதல்வரான பின் சைக்கிளிங் செய்த மு.க.ஸ்டாலின்…தீயாய் பரவும் போட்டோ

Featured

முதல்வரான பின் சைக்கிளிங் செய்த மு.க.ஸ்டாலின்…தீயாய் பரவும் போட்டோ

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பு, அவர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு உடற்பயிற்சி செய்வார் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே . அந்த சமயங்களில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சைக்கிளில் பயணம் செய்து பொதுமக்களுடன் பேசுவதையும், செல்ஃபி எடுப்பதையும் அவர் வாடிக்கையாக கொண்டிருப்பார்.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவர் பயணம் செய்த இடங்களில் வழிநெடுக போலீசார் பின்தொடர்ந்து பாதுகாப்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் வந்த ஸ்டாலின், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top