யோகிபாபு கதாநாயகனாக நடித்த முதல் படம் ரிலீஸ்—பைக் ரேஸ் வீரராக வருகிறார்…

0
195

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு “பட்டிபுலம்” என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார்.கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார்.கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ்.இவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராகபணியாற்றியவர்,பாடல்கள் மா.கா.பா.ஆனந்த்,வல்லவன் கானா ராஜேஷ் கானா வினோத்.

கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் இருக்கிறது .அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது .ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பது தான் கதை.இதை நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள்.இந்த படம் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வருகிறது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here