சிகை பட இயக்குனருடன் இணைந்த விமல்!!! வெளியானது அடுத்த படத்தின் அறிவிப்பு..

0
117

விமல் தமிழில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தளபதி விஜய் நடிப்ப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கில்லி படத்திலும் விஜயுடன் நடித்திருப்பார் இவர். அதன் பின் பசங்க படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எத்தன் என பல படங்களில் நடித்தார். சமீபத்தில் கூட இவரின் களவாணி 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுபோக இவர் வர லட்சுமி உடன் இணைந்து நடித்த கன்னி ராசி படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இவர். சோழ நட்டான் என பெயரிடப்பட்ட இந்த படத்தினை சிகை படத்தினை இயக்கிய ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். ஹரிஷ் பிலிம் ப்ரோடுக்ஷன் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கிறது. இந்த படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.