டீச்சரிடம் வசமாக மாட்டிய தளபதி விஜயின் மகன் சஞ்சய், அதன் பின்னர் என்ன ஆனது தெரியுமா?? – வீடியோ!!

0
274

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர்.

இவர்கள் இருவருமே விஜய்யின் படத்திலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் , அடிச்சாதாங்கமாட்ட , என்ற பாடலில் ஒரு சிறு காட்சியில் நடன மாடியிருந்தார்.அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த குறும்படம் வெளியான நிலையில் தற்போது சஞ்சய் நடித்த ‘சிரி ‘ என்ற மற்றும் ஒரு குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் தனது மொபைல் போன் ஆப் ஒன்றின் மூலம் பத்து நிமிடங்களுக்கு மாயமாக மறைந்து போகிறார் சஞ்சய். இதனால் அவரின் நடவடிக்கைகளைக் கண்டு யாரென்று தெரியாமல் பலரும் அச்சமடைகின்றனர். இறுதியாக தனது ஆசிரியரின் டேபிளில் இருக்கும் விடைத்தாள்களுக்கு மதிப்பெண்களை மாற்றும்போது கையும் களவுமாக சிக்கிக்கொள்கிறார். 4 நிமிடம் 25 வினாடிகள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை வரவேற்று பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.