படத்தில் இரண்டாவது வாய்பை தட்டிச் செல்லும் விஜய் டிவியின் செந்தில் கணேஷ்

0
292

விஜய் டிவியின் மூலம் “சின்ன மச்சான்” பாடல் மூலம் உலகிற்கு அறிமுகமானவர்கள் செந்தில் கணேஷ் தம்பதியினர். இதனால் இவர்களுக்கு சார்லி சாப்ளின் 2 படத்தில் அதே பாடலை ரீமேக் செய்து ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து தற்போது செந்தில் கணேஷ் அவர்கள் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் இயக்கத்தில் வெளியாக உள்ள “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் ‘’கபாலி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடகர் உமாதேவி அவர்களால் எழுதப்பட்ட பாடலை பாடகர் செந்தில் கணேஷ் இப்படத்தில் பாடியுள்ளார். இப்படத்திற்கு இசையமைத்தவர் டென்மா என்பவர். இரண்டாவது முறையாக கணேஷ் பாடும் இப்பாடல் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.