விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் க/பெ.ரணசிங்கம் !!! படத்தின் பூஜை துவங்கியது..

0
161

தற்போது மிகவும் பிஸியான நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். எப்போதும் இவர் தன் கைவசம் 10 படங்களை வைத்து கொள்வர். இவரின் சிந்துபாத் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது. அதுமட்டுமின்றி மாமனிதன், லாபம், எடக்கு,சங்கத்தமிழன் என பல படங்களில் நடித்து வருகிறார் இவர். இந்நிலையில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இவர்.

இந்த படத்தினை விருமாண்டி இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு க/பெ.ரணசிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை இன்று துவங்கியது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here