துப்பாக்கிச் சுடும் விடியோவை வெளியிட்டு “என்னை எல்லைக்கு அழைத்து செல்லுங்கள்” என்று கூறிய நயன்தாராவின் காதலர்.

0
174

புல்வாமா தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விக்னேஷ் சிவன் பதிவிட்ட சமூகவலைதளப் பதிவு சர்சையை ஏற்படுத்தியுள்ளது.இயக்குனரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் ,தான் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, கூடவே, “ராணுவ வீரர்கள் பலி. சுடும் பயிற்சியில் 9 க்கு 6 இலக்கை சுட்டுள்ளேன், என்னை எல்லைக்கு அழைத்து செல்லுங்கள்! ராணுவத்தில் சேர்வதற்கு என்ன வழிமுறை?” எனக் கேட்டிருந்தார்.

ஆனால், விக்னேஷ் சிவனின் இந்தப் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர். நிஜமாகவே ராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகளைச் சொன்னால் போய் அங்கு சேர்ந்து விடுவீர்களா?” எனப் பலர் காட்டமாக விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.அதோடு, ‘இது சினிமா அல்ல. மிகவும் உணர்ச்சிகரமான இது போன்ற சமயங்களில் இப்படி சினிமாத்தனமாகப் பேசாதீர்கள். பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். உண்மையிலேயே உங்களுக்கு ராணுவத்தில் சேர விருப்பம் என்றால் கூகுளில் அதற்கான வழிமுறைகள் கிடைக்கும்’ என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.