திருடா திருடி இயக்குனருடன் கைகோர்த்த சமுத்திரக்கனி!!! விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வெள்ளை யானை …

0
282

தமிழில் திருடா திருடி படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சுப்பிரமணியன் சிவா. அதன் பின்னர் அவர் இயக்கிய பொறி, யோகி மற்றும் சீடன் போன்ற திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் அடுத்து இவர் படம் இயக்குவதை குறைத்துக்கொண்டார். இந்நிலையில் மீண்டும் தமிழ் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் இவர் இந்த முறை சமுத்திரக்கனியை வைத்து புதிய படம் ஒன்றினை இயக்கியுள்ளார்.

வெள்ளை யானை என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி விவசாயியாக நடித்துள்ளார். இந்த படமானது தஞ்சை விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ஆத்மீய ராஜன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதையொட்டி படம் தணிக்கை குழுவிற்கு அனுப்புவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.