தம்பி ராமையாவின் மகன் நடிக்கும் “தண்ணி வண்டி”!!!

0
18

தம்பி ராமையா தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த நகைச்சுவை நடிகராக வளம் வருகிறார். இவரது மகன் உமாபதி ராமையா அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் சேரன் இயக்கத்தில் திருமணம் படத்திலும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவருக்கு வெற்றியை தரவில்லை. இந்நிலையில் தற்போது சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தண்ணி வண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை இயக்குனர் மாணிக்க வித்யா இயக்குகிறார். வில் அம்பு படத்தில் நாயகியாக நடித்த சமஸ்கிருதி இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா, ஜோர்ஜ் மற்றும் நரேன் ஆகியோரும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தற்போது தண்ணீர் பஞ்சம் சென்னையில் நிலவிவரும் நிலையில் மக்களை கவரும் நோக்கில் தண்ணீர் வண்டி என படத்தில் பெயரை வைத்துள்ளார்களாம். மேலும் இந்த படத்தில் உமாபதி ராமையா தண்ணீர் சப்ளை செய்யும் தொழிலாளராக நடித்துள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here