கடற்படை பயிற்சி மேற்கொள்ளப்போகும் நடிகைகள்….

0
205

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைபடத்தில் த்ரிஷாவுடன் சிம்ரனும் இணைந்து நடித்திருந்தார். தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு மெகா பட்ஜெட் படத்திற்காக இணைந்துள்ளனர். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. சுமந்த் ராதாகிருஷ்ணன் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார்.இப்படத்தை பற்றி தயாரிப்பு நிறுவனம் கூறியதாவது.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படம் ஒரு புதிய முயற்சியாக இருக்கும். படத்தின் படப்பிடிப்புகளை வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.அதற்காக த்ரிஷாவும்,சிம்ரனும் இருவரும் கடற்படை சார்ந்த பயிற்சியை மேற்கொள்ள உள்ளார்கள்,அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் சென்னை, கேரளா, பிச்சாவரம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.