பொன்னியின் செல்வன் படத்திற்காக 24 வருடத்திற்கு பிறகு மணிரத்தினத்துடன் இணையும் பிரபலம்!

0
73
nniyin Selvan Mani Ratnam New Movie

மணிரத்னம் அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமாக  எடுக்க உள்ளார். இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர் என தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். வைரமுத்து இப்படத்திற்காக 12 பாடல்களை எழுத உள்ளார் என்ற தகவலும் அண்மையில் வெளியானது.

தற்போது இப்படதிற்கு கலை இயக்குனராக தோட்டா தரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இப்படம் சோழர் காலத்தில் நடப்பது போல கதைக்களம் உள்ளதால், இப்படத்திற்கு பிரமாண்ட செட்கள் போட வேண்டியிருக்கும். அதனால், அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் இப்பணி கொடுக்கப்பட வேண்டும் என்பதால், இந்த பணி தோட்டா தரணியிடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இதற்க்கு முன்னர் மணிரத்னம் இயக்கிய நாயகன், தளபதி, பம்பாய் (1995) ஆகிய படங்களுக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here