அடிபட்டு வீல் சேரில் அமர்ந்திருக்கும் விஜய்…தளபதி63 பட கதை அம்பலமானது..

0
321

’தளபதி 63’படத்தின் கதையையே யூகித்து விடக்கூடிய அளவுக்கு அபாயகரமான புகைப்படம் ஒன்று வலைதளங்களில் ரிலீஸாகி வைரலாகியிருப்பதால் நடிகர் விஜயும் இயக்குநர் அட்லியும் செம டென்சனுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்புக் குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சக்கர நாற்காலி ஒன்றில் விஜய் அமர்ந்து தனது மாணவிகள் கால் பந்து ஆடுவதை வேடிக்கை பார்க்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சும்மாவே படத்தின் கதை குறித்த கற்பனைகளுக்குப் பேருதவியாக இந்த ஸ்டில் அமைந்திருப்பதால்…வில்லன்களால் தாக்கப்பட்டு வீல் சேரில் அமரும் நிலைக்கு வரும் விஜய் எப்படி வீறுகொண்டு எழுந்தார் என்று ஏழெட்டுக் கதைகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.