தளபதியின் குட்டிக்கதையுடன் ஆரம்பிக்கும் பெட்ரோமாக்ஸ் ட்ரெய்லர்! திகிலூட்டும் தமன்னாவின் புதிய திரைப்படம்!

0
114

தெலுங்கில் டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திகில் காமெடி கலந்த திரைப்படம் ஆனந்தோ பிரம்மா. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தமன்னா முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். பெட்ரோமாக்ஸ் என இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தினை அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை பிகில் பட இயக்குனர் அட்லீ வெளியிட்டார்.

இந்த ட்ரெய்லரில் ஒரு வீட்டில் பேய் இருப்பது போலவும், அந்த வீட்டில் தமன்னா குடும்பத்துடன் இருப்பது, அவர்களை பேய் தொந்தரவு செய்வது, என வழக்கமாக இருந்தாலும், ட்ரைலரில் வரும் காட்சிகளும், காமெடி காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படமும் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் தமன்னாவிற்கு ஒரு ஹிட் படமாக அமையும்