மூன்றாவது முறையாக ஜோடி சேரும் ஹிப்ஹாப் தமிழா – சுந்தர்.சி கூட்டணி!!!

0
79

ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆரம்ப காலகட்டங்களில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வெளியிட்டுவந்தார். இவருக்கு முதன் முதலாக இசையமைப்பாளராக வாய்ப்பளித்தது இயக்குனர் சுந்தர்.சி தான். ஆம்பள திரைப்படத்தில் முதல் முதலாக ஆதி இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின் ஆதி பல படங்களுக்கு இசையமைத்துவிட்டார். அதிலும் சுந்தர்.சி இயக்கம் பெரும்பாலான படங்களுக்கு இவரே இசையமைத்து வருகிறார்.

ஆதி அதனைத் தொடர்ந்து கதாநாயகராக மீசையமுறுக்கு படத்தின் மூலம் அறிமுகமானார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பினை பெற்ற இந்த படத்தினை சுந்தர்.சி தயாரித்தார். அதனைத் தொடர்ந்து ஆதி நடித்த நட்பே துணை படத்தினையும் அவரே தயாரித்தார்.

தற்போது இதனைத் தொடர்ந்து ஆதி நடிக்கும் மூன்றாவது திரைப்படத்தையும் அவரே தயாரிக்கிறார். இதன் மூலம் எங்களது கூட்டணி ஹாட்ரிக் அடித்துள்ளது என தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்தார் ஆதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here