சூர்யாவின் அடுத்த படத்தை கைப்பற்றிய சன் டிவி!!!

0
26

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான NGK திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு முழுமையான வரவேற்பை தரவில்லை. இதனை தொடர்ந்து அவர் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் காப்பான். இயக்குனர் கேவி ஆனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். மோகன் லால், ஆர்யா மற்றும் சயீஷா என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார். இதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த படத்தினை தொலைக்காட்சிகளில் திரையிடும் உரிமையை பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவி கைப்பைற்றியுள்ளது. இந்த படத்தினை பல கோடி ரூபாய் கொடுத்து சன் டிவி வாங்கியதாக கூறப்படுகிறது.

சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here