தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கல் வீச்சு–மாணவர்கள் அட்டகாசம்

0
113

ஜனவரி 10 ம் தேதி மும்பையில் ஒரு கல்லூரி வளாகத்தில் தொடங்கியது ’தர்பார்’படப்பிடிப்பு. தற்போது தொடர்ந்து அந்த கல்லுரியில் பட பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பின்போது வலைதளங்களில் தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் ரிலீஸாவது கல்லூரி மாணவர்களால்தான் என்பதைக் கண்டுபிடித்த படக்குழுவினர் நிர்வாகத்திடம் புகார் செய்ததோடு நில்லாமல் செக்யூரிட்டிகளை பல மடங்கு அதிகப்படுத்தினர்.

படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து மிக தொலைவில் நின்று பேசிக்கொண்டிருந்த மாணவர்கள் கூட விரட்டி அடிக்கப்பட்டனர். இதனால் எரிச்சலுக்குள்ளான மாணவர்கள் கோபமடைந்த மாணவர்கள் ‘தர்பார்’ படக்குழுவினர் மீது கல் வீசித் தாக்கியதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.படக்குழுவினருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் ரஜினி மிகவும் அப்செட்டாம்.மீண்டும் இது போல் நடந்தால் வேறு கல்லுரிக்கு படப்பிடிப்பை மாற்றலாம் என படக்குழு முடிவுசெய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here