சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படம் !!! வெளிவந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு….

0
183

சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்க மாறியவர். தற்போது இவர் நடிக்கு படங்களுக்கெல்லாம் தனிப்பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். தற்போது இவர் அடுத்தடுத்து நான்கு படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் கனா இத்திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் திரையுலகில் புதிய அவதாரம் எடுத்தார்.

அதன் பின் சமீபத்தில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா திரைப்படத்தையும் தயாரித்தார். இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன இந்நிலையில் தற்போது மூன்றாவதாக படம் ஒன்றினை தயாரிக்கிறார். வாழ் என பெயரிடப்பட்ட இந்த படத்தினை அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு இயக்குகிறார். இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கிறார்.இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.