திரையுலகில் அறிமுகமாகும் ஷாருக்கானின் மகன் !!

0
89

இந்திய திரையுலகிலேயே முன்னணி நடிகராக திகழ்பவர் ஷாருகான். பாலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் நடித்துவருகிறார் இவர். 53 வயதாகும் இவர் இன்றளவும் பார்ப்பதற்கு இளமையான தோற்றத்துடன் காட்சியளிப்பார்.

இவருக்கு ஆர்யன் கான், அப்ராம் கான் என இரண்டு மகன்களும் ஸுஹான கான் என்ற மகளும் உள்ளனர். இதில் அவரது மூத்த மகனான ஆர்யன் கான் தற்போது திரையுலகில் தலை காட்ட துவங்கியுள்ளார்.

ஹோலிவுட்டின் “லயன் தி கிங்” என்ற திரைப்படம் அடுத்தமாதம் திரைக்கு வரவுள்ளது. இதன் பாலிவுட் படத்திற்கு ஷாருகான் மகன் ஆர்யன் கான் டப்பிங் பேசியுள்ளார்.

இந்த படத்தில் சிம்பா என்ற சிங்கத்திற்கு அவர் டப்பிங் பேசியுள்ளார். மேலும் அதே படத்தில் காட்டு ராஜாவாக வரும் சிங்கத்திற்கு ஷாருகானும் டப்பிங் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல் நடிப்பதற்காக அவரது மகன் ஆர்யன் கான் பல பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் , விரைவில் நடிகராகவும் அறிமுகமாவர் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.