ஷண்முக பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்..

0
148

கேப்டன் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் தமிழில் ஒருசில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் அவருக்கு வெற்றியை தரவில்லை. சமீபத்தில் தேர்தலில் கூட நின்று அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்கு வந்துள்ளார் இவர். ஆனால் இந்த முறை வித்தியாசமாக போலீஸ் வேடத்தில் முதல் முறையாக நடிக்கிறார் ஷண்முக பாண்டியன்.

மித்ரன் என பெயரிடப்பட்ட இந்த படத்தை சிவாவின் துணையக்குநராக இருந்த பூபாலன் இயக்குகிறார். ஜி எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. ரோனிகா சிங் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.