ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா காதலரை பார்த்துள்ளீர்களா.. விரைவில் திருமணமாம்..

0
239

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் பத்தி நம்ம எல்லோருக்கும் தெரியும். இப்போது டிரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கும் சீரியலில் ரோஜா சீரியல் தான் பட்டையை கிளப்புகிறது. இந்த ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் தான் பிரியங்கா


தனது காதலர் மற்றும் திருமணம் குறித்து பேசிய அவர்…

எங்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த வருடம் மே மாதம் பத்தாம் தேதி நடந்து முடிந்தது. அவருடைய பெயர் ராகுல். அவர் நான் செல்லமா கிட்டுலு தான் கூப்பிடுவேன்.

தெலுங்கு சினிமா, டிவி சீரியல்ன்னு எல்லாரும் நீங்க அவர பார்த்து இருப்பிர்கள்.ஏன்னா,அந்த அளவுக்கு தெரிஞ்ச முகம் தான். எல்லாரும் சொல்லுவாங்க, ரெண்டு பேருமே ஒரே வேலையில் இருந்தா. வாழ்க்கை பயணம் ஈசியா இருக்கும். ஆனா, எங்களுக்கு அது தான் வினையாக மாறிடுச்சு.

நாங்க ரெண்டு பெரும் சூட்டிங் பிஸியில் ஒருத்தருக்கொருத்தர் பேச முடியாம, பார்க்க முடியாமல் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும், எங்க நிச்சயதார்தம் முடிந்த பின் கல்யாணத்தை எப்ப வைக்கலாம் என்று கேட்ட போது எங்க இரண்டு பேருக்கும் நேரமில்லாமல் தள்ளி போய்க்கொண்டு இருந்தது. அதனால கொஞ்சம் சின்ன, சின்ன சண்டை வந்து பெரிசா வந்துருச்சு.

திடீர்னு அவரு எனக்கு இந்த வேலையே வேணாம்னு சொல்லிட்டு மலேசியா சென்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு போயிட்டார். ஆனால், எல்லாரும் சொல்றாங்க எங்களுக்கு பிரேக்கப் ஆயிருச்சுன்னு. அந்த மாதிரிலாம் எதுவும் இல்லைங்க. நாங்க பேசிட்டு தான் இருக்கோம். கூடிய சீக்கிரம் எங்க கல்யாணத்தை பத்தி அறிவிப்போம் என சிரித்துக்கொண்டே சொன்னார். அது மட்டும் இல்லைங்க இந்த வருஷம் கடைசியில் எங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என்றார் பிரியங்கா