மீண்டும் இணையும் பியார் பிரேமா காதல் கூட்டணி !! வெளிவந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு…

0
199

ஹரிஷ் கல்யாண் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தான் பின்னரே அவர் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் நடித்த திரைப்படம் பியர் பிரேமா காதல். இந்த படத்தினை இளன் இயக்கினார். இதில் நாயகியாக ரைசா நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசை என இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது.

இயக்குனர் இளன்மீண்டும் ஹரிஷ் கல்யானை வைத்து புதிய படம் ஒன்றினை இயக்குகிறார். இந்த படத்தினை அம்மா ககிரேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிப்பதற்காக நாயகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் ஹரிஷ் கல்யாண் தனுசு ராசி நேயர்களே படத்திலும், தாராள ராஜா படத்திலும் நடித்து வருகிறார்.