ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்காது-அமைச்சர் ஜெயக்குமார்

0
77

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கதான் செய்யும் என தெரிவித்தார் .மேலும் நடிகர்கள் தங்களது கருத்துக்களை சொல்லலாம் எனவும் குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார் , ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்காது என்று குறிப்பிட்டார் .

தமிழக அரசு மீது கல்லெடுத்து அடிக்க நினைத்தால் அவர்கள் மீது தான் காயம் ஏற்படும் எனவும் தெரிவித்தார் .இலங்கை தமிழர் நலனை பாதுகாப்பதில் அதிமுக அரசு முனைப்பாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.