நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கும் மேயாத மான் நடிகை!!!

0
190

நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்து நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
சின்னத்திரையில் அறிமுகமாகி மேயாதமான் படம் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதைதொடர்ந்து கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். தற்போது இவர் மான்ஸ்டர், குருதி ஆட்டம் படங்கள் நடித்துள்ளார்.


தவிர, ஜீவா, அருள்நிதி படங்களில் நடிக்க இவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக துல்கர் சல்மான் நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இப்படத்தை ரா.கார்த்திக் இயக்கவுள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.