ஜப்பானில் வெளியாகும் பாகுபலி ஜோடியின் அடுத்த படம்…..

0
380

இந்திய சினிமா வரலாற்றிலேயே வசூலில் சாதனை படைத்த பாகுபலி படத்தின் படத்தின் இரண்டு பாகங்கள் இப்படத்தில் அனுஷ்கா பிரபாஸ் ரம்யா கிருஷ்ணன் நாசர் போன்றோர் நடித்துள்ளனர் இது தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மற்றும் வெளிநாட்டிலும் ரிலீசாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது . சமீபத்தில் ஜப்பானில் வெளியான இத்திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றது.இந்நிலையில் பிரபாஸ் – அனுஷ்கா நடித்த, மிர்ச்சி படத்தை ஜப்பானில் வெளியிட உள்ளனர்.

இப்படம் மார்ச் 2ம் தேதி வெளியாகிறது.இப்படத்தின் புரொமோஷனுக்காக பிரபாஸ், அனுஷ்கா இருவரும் ஜப்பான் செல்ல உள்ளனர். ஏற்கனவே அனுஷ்காவும், பிரபாஸூம் ஒருவரே ஒருவர் காதலிப்பதாக நீண்டகாலமாகவே தகவல் பரவி வருகின்றன.ஆனால் இருவருமே இச்செய்தியை மறுத்து விட்டனர். இந்நிலையில் இவர்களின் ஜப்பான் பயணத்தை வைத்து மேலும் கிசு கிசுகள் வந்த வண்ணம் உள்ளன.