சுதீப் நடிக்கும் பயில்வான் படத்தின் அடுத்த அப்டேட்!!!!

0
106

பாலிவுட்டில் முன்னணி நாயகராக வலம்வருபவர் சுதீப். இவர் தமிழில் நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அதன் பின்னர் இளையதளபதி விஜயின் புலி படத்திலும் வில்லனாக நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் ஓரளவிற்கு இடம் பிடித்தார். தற்போது இவர் நடித்துவரும் திரைப்படம் ” பயில்வான் “. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகிறது.

இந்தப்படத்தினை கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் சுதீப் குத்துசண்டை வீரராக நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் முதலாவது படலானது நாளை மலை 6.30 க்கு வெளியிட இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இதன் டீஸர் சுதீப்பின் பிறந்தநாளன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.