தாதா லுக்கில் மாஸ் காட்டும் பார்த்திபன்!! புகைப்படம் உள்ளே!!

0
131

தமிழ் திரையுலகில் தன் தனித்துவத்திற்கு என்றே பெயர் போனவர் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன்.

இவர் தற்பொழுது சந்தோஷ் இயக்கி வரும் “கே. ஆர். மார்கெட் C/O தீனா” என்னும் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் தாதாவாக நடித்துள்ளார்.

இப்படத்தை ஏயு பிக்சர்ஸ் சார்பில் ராமு தயாரிக்கிறார். இதில் பார்த்திபனுடன் சரத் யோகித், ஷாலி, அஜய் மற்றும் சர்வியா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை

தஞ்சாவூரில் வசித்து வந்த ஒரு குடும்பம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பெங்களூருக்கு இடம்பெறுகிறது. அங்கு அக்குடும்பத்தின் தலைவர் அதாவது பார்த்திபனின் அப்பா தாதாவாக மாறுகிறார். காலப்போக்கில் அவருக்கு வயது ஆகிறது. அவரின் இடத்தை பிடிக்க மற்றவர்கள் சதி செய்து வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்க அவரின் மகன் பார்த்திபன் தாதாவாகிறான். இப்படியாக கதைக்களம் நகர்கிறது என்று படத்தின் இயக்குனர் சந்தோஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here