தளபதி 63 அப்டேட்டையே தள்ளிப்போடவைத்த ‘நேசமணி’ – யாருப்பா நீ எங்கிருந்து வந்த.. .!

0
187

நேற்றிலிருந்து இருந்து ட்விட்டரில் உலக அளவில் டிரெண்ட் ஆகிக்கொண்டிருக்கும் ஒரு வார்த்த ‘நேசமணி’ என்ற வார்த்தை டுவிட்டர் இணையதளத்தையே கதிகலக்கி வருகிறது. இதுகுறித்து ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் பதிவாகி வருகிறது.

இந்தநிலையில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 63’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்களிடம் விஜய் ரசிகர்கள் சிலர் ‘தளபதி 63’ படம் குறித்த அப்டேட்டுக்களை வெளியிடுங்கள் என்று டுவிட்டரின் மூலம் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் கூறிய அர்ச்சனா கல்பாதி, ” இது நேசமணிக்காக பிரார்த்தனை செய்யும் நேரம், ‘தளபதி 63′ படம் குறித்து அப்டேட்டுக்கான நேரம் அல்ல’ என்று நகைச்சுவையாக டுவீட் ஒன்றை பதில் செய்துள்ளார்.

அதேபோல் பல பிரபலங்கள் நேசமணி குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளனர் அந்தவகையில் கஸ்தூரி, சாய்தன்ஷிகா, பாலசரவணன், உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் நேசமணி குறித்து தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக நடிகர் பாலசரவணன், ‘இன்னும் 2000 வருஷத்துக்கு நேசமணியை ஒண்ணுமே செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here