லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
84

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்ட சரித்திர படமாக உருவாகியுள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இப்படத்தில், அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, சுதீப் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சுமார் 6 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தென்னிந்திய சினிமா உலகில் ஒரு நடிகை பெறும் அதிக சம்பளம் ஆகும். இதற்க்கு முன்னர் ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கினார் என கூறப்படுகிறது.