விமல், ஆர்த்தி ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்தது நடிகர் சங்க தேர்தல் ஆணையம்!!!

0
108

நடிகர் சங்க தேர்தலானது வரும் ஜூன் 23 அன்று நடைபெற உள்ளது. இதற்க்கு ஏற்கனவே பதவிலிருந்த விஷாலின் பாண்டவர் அணி போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பதவிலிருந்த பொன்வண்ணனைத் தவிர மற்ற அனைவரும் அதே பதவிக்கு போட்டிடுகின்றனர். அவர்களை எதிர்த்து இம்முறை பாக்கியராஜ் தலைமையில் புதிய அணி ஒன்று உருவாகியுள்ளது. அதற்க்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயரிட்டுள்ளனர்.

அதில் தலைவர் பதவிக்கு பாக்கியராஜும், செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்தும் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் அதற்க்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. மொத்தம் 90 பேர் இதில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று பாக்கியராஜ் அணியை சேர்த்த விமல், ஆர்த்தி மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோரின் வேட்பு மனுக்கள் அவர்கள் சரியாக சாந்தா தொகையை செலுத்ததன் காரணத்தினால் நிராகரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here