முனியாக ஆடியுள்ளாரா ஆர்யா? மஹாமுனி படத்தின் விமர்சனம்!

0
221

தமிழில் மௌனகுரு என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சாந்தகுமார் ‘மகாமுனி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்

கதைக்களம்

இதில் மகாதேவன் ஒரு கார் ஓட்டுனராக பணிபுரிந்து பின்னர் சிறப்பாக ஆட்களை எப்படி தூக்க வேண்டும் என்று தெளிவாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கும் ஒரு நபராகவும், அடியாளாகவும் இருந்து வருகிறார். இவரது மனைவியாக இந்துஜா நடித்துள்ளார்.

இந்த ஆர்யாவிற்கு நேரெதிராக முனிராஜ் என்ற கதாபாத்திரத்தில் வரும் மற்றுமொரு ஆர்யா தாழ்த்தபட்ட சமூகத்தில் வளர்ந்துவருபவராகவும் மிகவும் சாதுவான நபராகவும் ஜாதிகளை அகிம்சை வழியில் எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு நபராகவும் நடித்துள்ளார். அவரது தோழியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் கர்மா ஒரு பூமராங் போன்ற பல பழமொழிகளை நாம் கேட்டிருப்போம். அந்த பழமொழிகளை மையமாகக் கொண்டதுதான் இந்த மகா முனி திரைப்படம். வெவ்வேறு கோட்டில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் போது என்ன நடக்கிறது. இவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்புதான் என்ன என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை. அதனை மௌனகுரு பாணியில் மிகவும் சுவாரசியமாகவும் உரிமையுடன் அவள் பார்க்கும் ஒரு படமாகவும் கொடுத்துள்ளார் இயக்குனர்.

ப்ளஸ் :

  • இயக்குனர் கதையை கையாண்டுள்ள விதம்
  • இரண்டு வேடங்களையும் அருமையாக வித்தியாசப்படுத்தி காண்பித்துள்ள ஆர்யா
  • இந்துஜாவின் எதார்த்தமான நடிப்பு
  • அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு
  • தமனின் இசை

மைனஸ் :

  • படத்தின் இரண்டாம் பாதியில் சிறுது நேரம் இருக்கும் தொய்வு
  • படத்தை சிறிது நேரம் பார்க்காமல் விட்டால் படத்தில் குழப்பம் ஏற்படும்
  • நிறைய கதாபாத்திரங்களால் ஏற்படும் சிறிது குழப்பம்