மீண்டும் தமிழில் நடிக்கும் மடோனா செபாஸ்டின் !!! அதுவும் இந்த ஹீரோ படத்தில்…

0
92

மடோனா செபாஸ்டின் மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மெகா ஹிட் ஆனது. தனது முதல் படத்திலேயே நல்ல பிரபலமாகிவிட்டார் இவர். அதன் பின்னர் தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்துபோகும் திரைப்படத்தில் மூலம் கோலிவுட் திரையுலகிலும் தனது கால் தடத்தினை பதித்தார்.

அதன் பின்னர் கவண், பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்தார் இவர். இருந்தாலும் இவர் தற்போது தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் மலையாளத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மணிரத்னம் தயாரிக்கும் “வானம் கொட்டட்டும்” என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இவர். இந்த படத்தினை படைவீரன் படத்தினை இயக்கிய தானா இயக்குகிறார். இதில் விக்ரம பிரபுவுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜூலை மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பினை துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here