ஜி.வி.பிரகாஷ் ராஜா ஆனாரா–குப்பத்து ராஜா பட விமர்சனம்

0
387
நடிகர்ஜி வி பிரகாஷ்குமார்
நடிகைபல்லக் லால்வானி
இயக்குனர்பாபா பாஸ்கர்
இசைஜி.வி.பிரகாஷ் குமார்
ஓளிப்பதிவுமகேஷ் முத்துசுவாமி

படதின் கதை:

குப்பத்தில் வாழும் குடிசைவாசிகளுக்கு இடையேயான உறவு பற்றியும், சில சமூக விரோத சக்திகள் அவர்கள் வாழ்வில் அமைதியின்மையை எவ்வாறு உருவாக்குகின்றனர் என்பதையும் பற்றியும் கூறும் படம் தான் குப்பத்து ராஜா.

MGRயின் ரசிகரான MG ராஜேந்திரன் (பார்த்திபன்) தலைமையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட கும்பல் குப்பத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.அதில் ராக்கெட்(ஜி.வி.பிரகாஷ்) அப்பாவான எம்.எஸ்.பாஸ்கரும் ஒருவர், தொடக்கத்தில் இருந்தே ஜி.வி.பிரகாஷுக்கும், பார்த்திபனுக்கும் மோதல் இருக்கிறது.

அதே குப்பத்தில் வசித்து வரும் நாயகி பல்லக் லால்வானியும், ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் வீட்டுக்கு அருகில் குடிவருகிறார் பூனம் பாஜ்வா. இவரால் காதலர்களான ஜி.வி.பிரகாஷ் – பல்லக் லால்வானி இடையே அடிக்கடி சண்டை வருகிறது.

அந்த பகுதியில் கவுன்சிலராக இருக்கும் கிரணை பொது இடத்தில் வைத்து எம்.எஸ்.பாஸ்கர் கிண்டல் செய்கிறார். மறுநாளே எம்.எஸ்.பாஸ்கர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார் என்று தெரியாமல் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் குழம்பி இருக்கின்றனர். அதேபோல் அந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவனும் மர்மமான முறையில் காணாமல் போகிறான்.ஜி.வி.பிரகாசுக்கு பார்த்திபன் மீது சந்தேகம் வருகிறது.

கடைசியில், எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார்? காணாமல் போன சிறுவன் என்னவானான்? ஜி.வி.பிரகாஷ் – பல்லக் லால்வானி இணைந்தார்களா? இந்த கேள்விக்கான விடை தான் மிச்ச கதை.

படத்தின் பிளஸ்:

ஜி.வி. பிரகாஷ் அக்கறை இல்லாத குப்பத்து பையனாக வலம் வருகிறார்,குப்பத்து நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.பார்த்திபன் தனது வழக்கமான நக்கல் நய்யாண்டி பணியை தொடர்கிறார்.பல்லக் லால்வானி தைரியமான வடசென்னை பெண்ணாக தமிழில் நல்ல அறிமுகத்தை பெற்றிருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.பூனம் பஜ்வா கவர்ச்சிக்கு மட்டும்.ஜி.வி.பிரகாஷ் இசையில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

படத்தின் மைனஸ்:

ஜிவி.பிரகாஷ் தனது தந்தையை கொன்றவனை பழிவாங்கும் காட்சிகள் சற்று நம்பும் படி இல்லை. நாயகி பல்லக் லால்வானி டப்பிங் சொதப்பி இருக்கிறது.குப்பத்து வாழ்க்கையை சற்று மிகை படுத்தி காட்டுவது போல் உள்ளது.

படத்தில் இறுதியில் வரும் ஒரு ட்விஸ்ட் ரசிக்கும் படி இல்லை.வடசென்னை பேச்சும் இயல்பானதாக தோன்றவில்லை, பெரும்பாலான இடங்களில் நாடகம் போல் தோன்ற வைக்கிறது.படத்தில் மேலும் சில சுவாரஸ்யமான காட்சிகள்,சஸ்பென்ஸ் வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் இந்த படத்தில் புதியதாக ஏதுவும் இல்லை.ஒரு ஜாலியான மசாலா படம் அவ்வளவுதான்.

சினிமாமேடை மதிப்பெண்— 2.5/5