ரஜினியை விமர்சித்த காட்சிகள் கோமாளி படத்திலிருந்து நீக்கப்படும்-தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

0
142

கோமாளி படத்தில் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விமர்சித்த காட்சி நீக்கப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தெரிவித்துள்ளார்.அடங்க மறு படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இதில் முதன்முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார் . மற்றொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.அந்த ட்ரைலரில் இடம் பெற்ற ஒரு காட்சியில் கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு டிவியில் ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரைலர் முடிவடைகிறது.

Kajal, Jayam Ravi in Komali Movie Pics

இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நானும் ரஜினி ரசிகன் தான். அவர் அரசியலுக்கு வருவதை நானும் ரசிகர்களைப் போல் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ரஜினியின் பெயருக்கு என்னால் கலங்கம் ஏற்பட விடமாட்டேன். கோமாளி படத்தின் ட்ரைலரை பார்த்த நடிகர் கமல்ஹாசன் என்னிடம் தொலைபேசியில் பேசி வருத்தம் தெரிவித்தார். ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here