நேரடியாக தல அஜித்துடன் மோதும் ஜெயம் ரவி!!!

0
89

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலமாக அறிமுகமாகி பின் பல படங்களில் ஹிட் கொடுத்து முன்னணி நாயகராக விளங்கி வருகிறார். கடைசியாக அவர் நடித்த அடங்கமறு திரைப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது வித்தியாசமாக 9 வேடங்களில் ஜெயம் ரவி நடித்திருக்கும் திரைப்படம் கோமாளி. காஜல் அகர்வால் ஐந்தில் நாயகியாக நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் பல போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர் பரப்பை அதிகப்படுத்தியது படக்குழு. இந்நிலையில் இந்த படத்தை வரும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று வெளியிடவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர். ஏற்கனவே அதே நாளில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படமும் திரைக்கு வருவதால் அதற்க்கு போட்டியாக கோமாளி படத்தை படக்குழுவினர் திரையிடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.