கத்தி படத்தின் பெயரை முதலில் நாங்கள் தான் வைத்தோம் !!! பேட்டியில் சர்ச்சையை கிளப்பிய விஜய் டிவி பிரபலம்..

0
274

2014 ஆம் ஆண்டில் விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் உருவான திரைப்படம் கத்தி. இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் கத்தி என்று பெயரை முதலில் நாங்கள் தான் வைத்திருந்தூம் என விஜய் டிவி புகழ் அமுதவாணன் தெரிவித்துள்ளார்.

அமுதவாணன் விஜய் டிவி -ன் சிரிச்ச போச்சு குழுவில் ஒருவராக பல ஆண்டுகளாக இருந்து வந்தார். அதன் பின்னர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார் இவர்.

இந்நிலையில் தற்போது இவர் கதாநாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் மையூரன் . இந்த படம் குறித்து சமீபத்தில் அவர் பேட்டியளித்தார். அதில் நான் தாரை தப்பட்டை படத்திற்கு முன்னரே இந்த படத்தில் நடிக்க துவங்கி விட்டேன். முதலில் நாங்கள் இந்த படத்திற்கு வைத்த தலைப்பு கத்தி. இது விஜயின் கத்தி படம் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே நாங்கள் வைத்தோம். ஆனால் அதன் பின்னர் சில காரணங்களால் இந்த படத்தில் படப்பிடிப்பு தள்ளிப்போனது அதானால் இந்த படத்திற்கு பெயரை மாற்றி மையூரன் என பெயர் வைத்தோம் என கூறினார்.