பிரபல பாடகியை டிசம்பரில் திருமணம் செய்யும் அஜித் பட வில்லன்..!

0
55

ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் கோபிசந்த் நடித்த ஜில் தெலுங்கு படம் மூலம் நடிகரானவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கபிர் துஹான் சிங். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார் கபிர் துஹான் சிங். அவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் விஷாலின் ஆக்ஷன் ஆகும்.

கபிர் துஹான் சிங் பாடகி டாலி சித்துவை காதலித்து வருகிறார். பஞ்சாபி திரையுலகில் பிரபலமான டாலிக்கும், கபிர் துஹான் சிங்கிற்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

2020ம் ஆண்டின் துவக்கத்தில் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் திருமண தேதியை தள்ளிப் போட்டனர். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் கபிர் துஹான் சிங்கின் திருமணம் நடக்கும் என்று தகவல் வெளியானது.டிசம்பரில் டாலி சித்துவை திருமணம் செய்து கொள்வதை கபிர் துஹான் சிங் உறுதி செய்துள்ளார்.