மம்முட்டியுடன் மலையாளத்தில் அறிமுகமாகும் ஜெய் !!!!

0
196

ஜெய் தமிழில் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக அறிமுகமானார். பின்னர் சென்னை 600 024, கோவா, ராஜா ராணி போன்ற பல வெற்றித் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு மலையாளத்தில் மம்முட்டியுடன் நடிக்கும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அந்த படத்தில் மம்முட்டிக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார். மதுர ராஜா எனப் பெயரிடப்பட்ட இந்த படத்தை விஷ்கா இயக்குகிறார். இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.